பலாப்பழங்களை ஆர்வமுடன் பொதுமக்கள் வாங்கிச் சென்றுள்ளனர்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள தாளவாடி பகுதியில் கிடைக்கும் பலாப்பழங்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை ஆகும். இந்நிலையில் தாளவாடி பலாப்பழங்கள் ஈரோடு சந்தைக்கு விற்பனைக்காக கொண்டு வரப்பட்டுள்ளன. இதனையறிந்த பொதுமக்கள் ஏராளமானோர் ஆர்வமுடன் பலாப் பழங்களை வாங்கிச் சென்றுள்ளனர்.
இது குறித்து வியாபாரிகள் கூறும்போது எப்போதுமே தாளவாடி பலாப்பழத்திற்கு மவுசு அதிகம் எனவும், மக்கள் அதிகமாக வாங்கி செல்வர் எனவும் தெரிவித்துள்ளனர். மேலும் ஒரு கிலோ பலாப்பழம் 20 ரூபாய் முதல் விற்பனை செய்து வருகிறோம் எனவும் தெரிவித்தனர். இந்நிலையில் அதிகமான பலாப்பழங்கள் விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.