Categories
உலக செய்திகள்

Big Alert: மரணத்தை ஏற்படுத்தும் அடுத்த ஆபத்து…. பெரும் பரபரப்பு….!!!!

அமெரிக்காவில், கேண்டிடா என்ற ஆரிஸ் வகை பூஞ்சை நோய் பரவி வருவதால் அந்நாட்டு மக்கள் அச்சத்தில் உள்ளனர். அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதன் காரணமாகஅமெரிக்காவில் பலி மற்றும் பாதிப்பு அதிகரித்தது. தற்போது அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், அமெரிக்காவில் டெல்டா வகை கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், அமெரிக்காவின் டல்லாஸ் மற்றும் வாஷிங்டன் டி.சி., பகுதியில், கேண்டிடா என்ற ஆரிஸ் வகை பூஞ்சை நோய் கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்த அமெரிக்க சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது, வாஷிங்டனில் 101 பேருக்கும், டல்லாஸ் பகுதியில் 22 பேருக்கும் கேண்டிடஸ் என்ற ஆரிஸ் வகை பூஞ்சை தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இவர்கள் அங்குள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். நோய் பாதித்தவர்களுக்கு ஆன்டிபயாடிக் சிகிச்சை அளித்து வருகின்றனர். இருந்தபோதிலும் இவர்களுக்கு உடல்நிலை சரியாகவில்லை. கேண்டிடஸ் என்ற ஆரிஸ் வகை பூஞ்சை நோயின் அறிகுறிகளாக காய்ச்சல் மற்றும் குளிர் ஆகியவை உள்ளது. மேலும், இந்த பூஞ்சை தொற்று உடலில் ரத்த ஓட்டத்தை பாதித்து உயிரிழப்பை ஏற்படுத்தும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Categories

Tech |