Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இதே வாடிக்கையா போச்சு…. சோதனையில் சிக்கிய பொருள்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைகளை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக புகையிலைப் பொருட்களை பல்வேறு கடைகள் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் காவல்துறையினர் திருப்பூர் பகுதியில் உள்ள பெட்டி கடைகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அந்த சோதனையில் சுமார் 20 கடைகளில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் வைத்து விற்பனை செய்யப்பட்டுள்ளதை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.

அதன்பின் உணவு பாதுகாப்பு நியமன அதிகாரியான விஜய லலிதாம்பிகை, மாநகர நல அதிகாரி பிரதீப் வாசுதேவ கிருஷ்ணர் மற்றும் காவல்துறையினர் புகையிலை விற்பனை செய்த குற்றத்திற்காக அதிரடியாக 20 கடைகளை சீல் வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

Categories

Tech |