தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்புகளுக்கு மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டது. இதையடுத்து மாணவர்கள் உயர்கல்வி பயில விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில் பி.இ பிடெக் போன்ற பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்ப பதிவு நாளை முதல் தொடங்குகிறது. எனவே பொறியியல் படிப்புகளில் சேர விரும்புபவர்கள் www.tneaonline.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் செப்டம்பர்-4 இல் வெளியிடப்படும் என்றும், செப்டம்பர் 7 முதல் அக்-4 வரை கலந்தாய்வு நடைபெறும் என்றும், பொறியியல் படிப்புகளுக்கான ரேண்டம் எண் ஆகஸ்ட் 25 ல் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.