Categories
உலக செய்திகள்

இந்தோனேசியா சென்ற கொரோனா நிவாரணப்பொருட்கள்.. ஐராவத் போர்க்கப்பலில் அனுப்பப்பட்டது..!!

இந்திய கடற்படையின் ஐராவத் போர்க்கப்பல் கொரோனா நிவாரண பொருட்களை எடுத்துக்கொண்டு நேற்று இந்தோனேசியாவிற்கு சென்றுள்ளது.

ராணுவ தளவாடங்களை சுமந்து செல்லக்கூடிய ஐராவத் என்ற போர்க்கப்பல் இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் பல நிவாரண பணிகளில் பயன்படுத்தப்படும். மேலும் பேரிடர் மீட்பு பணிகளில் உதவிக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

இந்நிலையில் இந்தோனேசியாவிற்கு இப்போர் கப்பலின் மூலமாக 100 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜனும் ஆக்சிஜன் செறிவூட்டிகள் 300-ம் 5 கிரையோஜெனிக் கொள்கலன்களில் அனுப்பப்பட்டிருக்கிறது. இந்தோனேசியாவின் தலைநகரான ஜகார்த்தா துறைமுகத்திற்கு நேற்று போர்க்கப்பல் சென்றிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |