இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் தாத்தா – பேத்தி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலைப்பேட்டை பகுதியில் கனகசபாபதி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் தனது பேத்தி அனன்யாவுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். இதனையடுத்து உடுமலை பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது கர்நாடகாவில் இருந்து தேங்காய் மட்டைகளை ஏற்றிக்கொண்டு வந்த லாரியானது கனகசபாபதியின் இருசக்கர வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதியுள்ளது.
இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த கனகசபாபதி மற்றும் அனன்யா மீது லாரியின் டயர் ஏறி இறங்கியதால் அனன்யா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் உயிருக்கு போராடிய கனகசபாபதியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே கனகசபாபதி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் லாரி டிரைவரான முருகேசனை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்