தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் B.E., B.Tech., ஆகிய பொறியியல் படிப்புகளில் சேருவதற்கும் இன்று முதல் விண்ணப்ப பதிவு தொடங்குகிறது. http://tneaonline.org இணையதளத்தில் இன்று முதல் ஆகஸ்ட் 24 வரை விண்ணப்பிக்கலாம். தரவரிசைப் பட்டியல் செப்டம்பர் 4-ம் தேதி வெளியிடப்படும் என தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. மேலும் ஆகஸ்டு 25ல் ரேண்டம் எண் வெளியாகும். செப்டம்பர் 7 முதல் அக்டோபர் 4 வரை கலந்தாய்வு நடைபெறும். அக்டோபர் 20க்குள் கலந்தாய்வை முடித்து மாணவர் சேர்க்கை தொடங்கப்படும் என தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
Categories