சூரியகாந்தியை வெட்டும் கிளிகளை விவசாயிகள் ஓசை எழுப்பி விரட்டுகின்றனர்.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலை பகுதியில் விவசாயிகள் சூரியகாந்தி சாகுபடியில் அதிக ஆர்வமுடன் ஈடுபட்டுள்ளனர். ஆனால் சூரியகாந்தியின் மணிகள் முற்றும் தருவாயில் கிளிகளிடமிருந்து பாதுகாப்பது விவசாயிகளுக்கு பெரும் சவாலாக இருக்கிறது. இந்நிலையில் சூரியகாந்தியை வெட்டும் கிளிகளை விவசாயிகள் ஓசை எழுப்பி அங்கிருந்து விரட்டுகின்றனர்.
இது குறித்து விவசாயிகள் கூறும்போது தற்போது அறுவடைக்கு ஆட்கள் கிடைக்காததால் எந்திரங்கள் மூலம் அறுவடை செய்ய வேண்டியுள்ளது. இதனையடுத்து இன்னும் 20 நாட்களில் சூரியகாந்திகள் அறுவடைக்கு தயாராகி விடும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.