யுவன் சங்கர் ராஜாவுக்கு இன்ஸ்டாகிராமில் மிகக்குறைந்த பாலோயர்கள் இருப்பதாக நெட்டிசன்கள் கிண்டல் செய்து வந்தனர் .
தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் யுவன் சங்கர் ராஜா. இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் மாநாடு, வலிமை உள்ளிட்ட சில படங்களுக்கு இசையமைத்து வருகிறார். கடந்த சில நாட்களாக யுவன் சங்கர் ராஜாவுக்கு இன்ஸ்டாகிராமில் மிகக்குறைந்த பாலோயர்கள் இருப்பதாக நெட்டிசன்கள் கிண்டல் செய்து வந்தனர்.
மேலும் பல வருடங்களாக இசையமைப்பாளராக இருக்கும் யுவனுக்கு ஒரு மில்லியனுக்கும் குறைவான பாலோயர்கள் தான் இருக்கிறார்கள் என்ற மீம்ஸ்களும் வைரலாகி வந்தது. இதையடுத்து உடனடியாக களத்தில் இறங்கிய யுவனின் ரசிகர்கள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாலோயர்களை சேர்க்க முயற்சி செய்தனர். இந்நிலையில் யுவன் சங்கர் ராஜா இன்ஸ்டாகிராமில் ஒரு மில்லியன் பாலோயர்களை பெற்றுள்ளார். இதனை யுவன் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.