சாராயம் காய்ச்சுதலில் ஈடுபட்ட 200-க்கும் அதிகமானவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் சாராயம் காய்ச்சுவதற்காக பேரல்களில் ஊறல்களை வைத்திருப்பதாக சூப்பிரண்டு ஜியாவுல்ஹக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதிக்கு சென்று அங்கே உள்ள ஓடைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 பேர்களில் 2000 லிட்டர் சாராய ஊழலை கண்டுபிடித்து அவற்றைத் தரையில் ஊற்றி அளித்துள்ளனர்.
இதனையடுத்து காவல்துறை சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் கூறும்போது இம்மாவட்டம் முழுவதுமாக சாராயம் காய்ச்சி சிறையில் அடைக்கப்பட்டு மீண்டும் வெளி வந்து திரும்பவும் சாராயம் காய்ச்சிதலில் ஈடுபடும் நபர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் என 200-க்கும் அதிகமானோர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். மேலும் சாராய காய்ச்சுதல் மற்றும் விற்பனையில் ஈடுபடும் நபர்களை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் எச்சரிக்கை செய்துள்ளார்.