Categories
தேசிய செய்திகள்

இனி விடுமுறை தினங்களிலும்…. உங்களுக்கு சம்பளம் வரும்…. வெளியான ஹேப்பி நியூஸ்…!!!

அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வங்கிகள் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. சம்பளம், பென்ஷன் உள்ளிட்ட அனைத்தும் வங்கிகள் செயல்படும் தினங்களில் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. அதேபோல ஞாயிற்றுக்கிழமை போன்ற விடுமுறை நாட்களிலும் சம்பளம், பென்ஷன், இஎம்ஐ கட்டணம் போன்றவை வராது. இந்நிலையில் இந்த முறையானது தற்போது மாற்றப்பட்டு ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் ஞாயிறு விடுமுறை நாட்கள் உட்பட எல்லா நாட்களிலும் சம்பளம் பென்ஷன் வரும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதன்படி ஊழியர்கள் ஓய்வூதியதாரர்களுக்கு சம்பளம், பென்ஷன் அனைத்தும் NACH மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. NACH என்பது ஒரு நபர் அல்லது நிறுவனத்திடமிருந்து பலருக்கும் பணம் அனுப்பும் அமைப்பு. இது ஒரு தேசிய பரிவர்த்தனைக் கழகத்தின் கீழ் இயங்கி வருகிறது. இதுவரை இந்த அமைப்பு வங்கி செயல்படும் நாட்களில் மட்டுமே செயல்பட்டு வந்தது. ஆனால் ரிசர்வ் வங்கியின் உத்தரவின்படி ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் அனைத்து நாட்களிலும் செயல்படும் என்பதால் ஊழியர்கள் வருடம் முழுவதும் எல்லா நாட்களிலும் சம்பளம், பென்ஷன் பெற முடியும் என்பதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |