நாமக்கல் மாவட்டத்தில் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் மோகனூரை அடுத்துள்ள ராசிகுமரிபாளையத்தில் சிவகுமார்(40) என்பவர் அவரது மனைவி பார்கவியுடன்(25) வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சிவகுமார் ராணுவத்தில் பணியாற்றி தற்போது ஓய்வு பெற்று குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இதனையடுத்து இவர் கடந்த 5ஆம் தேதி மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டு வளையப்பட்டி சாலையில் உடலில் காயங்களுடன் உயிரிழந்து காணப்பட்டுள்ளார்.
இதனைத்தொடர்ந்து மோகனூர் போலீசார் சிவகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்த நிலையில் கொலை செய்தவர்கள் யார் என விசாரணை நடத்தி வந்துள்ளனர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் சிவகுமார் மனைவி பார்கவி செல்வராஜ் என்பவருடன் தகாத உறவில் இருந்துள்ளார். இதற்கு சிவகுமார் இடையூறாக இருந்ததால் பார்கவி மற்றும் கள்ளக்காதலன் செல்வராஜ் திட்டம்போட்டு கூலிபடைகளை வைத்து சிவகுமாரை கொலை செய்துள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் காவல்துறையின் பார்கவி, அவரது தயார் அம்சவள்ளி(49), செல்வராஜ் மற்றும் கூலிப்படையினரான 6 என மொத்தம் 9 பேரை கைது செய்துள்ளனர். இதனையடுத்து அவர்களிடம் விசாரணை நடத்திய போலீசார் இந்த கொலைவழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை தேடி வந்த நிலையில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த கோகுல்(21) என்பவரையும், திருமலைகிரியை சேர்ந்த நரேந்திரன்(21) என்ற 2 இளைஞர்களையும் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு நாமக்கல் சிறையில் அடைத்துள்ளனர்.