நீங்கள் இந்தியன் வங்கி வாடிக்கையாளராக இருந்தால் உங்கள் கணக்கில் உள்ள இருப்பு தொகையை அறிந்து கொள்வதற்கு வங்கிக்கு சென்று பார்க்க்க தேவை இல்லை. உங்கள் செல்போனிலிருந்து 092895 92895 என்ற எண்ணுக்கு ஒரு மிஸ்டு கால் கொடுத்தால் போதும். உங்கள் கணக்கில் உலகில் உள்ள இருப்பு தொகை உங்களுக்கு மெசேஜ் வந்துவிடும். இதற்கு கட்டணமும் வசூலிக்கப்படுவது கிடையாது. இதற்கு கட்டாயமாக உங்களுடைய வங்கி கணக்கில் உங்களுடைய செல்போன் நம்பர் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். பதிவு செய்யப்படவில்லை என்றால் வங்கியை அணுகவும்.
ஐசிஐசி வங்கி:
ஐசிஐசிஐ வங்கி ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர் கணக்கில் உள்ள இருப்பு தொகை அறிந்து கொள்வதற்கு உங்கள் செல்போனிலிருந்து 022 30256767 என்ற எண்ணுக்கு மிஸ்ட் கால் கொடுத்தால் போதும் கணக்கில் இருப்புத் தொகையை பார்த்துக்கொள்ளலாம்.
கனரா வங்கி:
கனரா வங்கி வாடிக்கையாளராக இருந்தால் உங்களுடைய இருப்புத் தொகை தெரிந்து கொள்வதற்கு 092892 92892 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்தால் போதும் கணக்கில் இருப்புத் தொகை மெசேஜ் வந்துவிடும்.