ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி கணக்கில் ஏடிஎம் கார்டு டெலிவரி ஸ்டேட்டஸ் பார்ப்பது எப்படி என்பது குறித்து தெளிவாக இந்த தொகுப்பில் நாம் தெரிந்துகொள்வோம்.
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா. இது தனது வாடிக்கையாளருக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றது. ஏடிஎம் கார்டுக்கு விண்ணப்பித்தலும் இதில் சுலபம்தான். ஆன்லைன் மூலமாக நீங்கள் ஏடிஎம் கார்டு விண்ணப்பித்து வாங்கிக்கொள்ள முடியும். பொதுவாக வங்கி கணக்கு திறக்கும் போது அதனுடன் சேர்த்து ஏடிஎம் கார்டு விண்ணப்பித்து வாங்கி விடுவார்கள். ஆனால் ஏடிஎம் கார்டு தொலைந்து போனாலோ அல்லது திருடப்பட்டாலோ உடனடியாக பிளாக் செய்து விட்டு புதிய கார்டு நாம் விண்ணப்பிப்போம்.
இதனை ஆன்லைன் மூலமாக நாம் விண்ணப்பிக்க முடியும். அந்த வசதி இல்லாதவர்கள் நேரடியாக வங்கிகளுக்கு சென்று விண்ணப்பிக்க முடியும். அவ்வாறு விண்ணப்பித்தவுடன் ஏடிஎம் கார்டு இந்தியா போஸ்ட் சேவை மூலமாக ஸ்பீட் போஸ்ட்டில் நமக்கு கிடைக்கும். அப்படி அனுப்பப்பட்டதற்கான டிராக்கிங் நம்பர் வாடிக்கையாளருக்கு வழங்கப்படும். அந்த நம்பர் வழங்கவில்லை என்றால் வங்கி கிளைக்கு சென்று நாம் வாங்கிக்கொள்ளலாம்.
ஏடிஎம் கார்டு விண்ணப்பித்து 7 முதல் 10 நாட்களில் வாடிக்கையாளரின் முகவரிக்கு வந்து சேரும். அப்படி வரவில்லை என்றால் வங்கியில் நாம் பெற்ற டிராக்கிங் நம்பரை கொண்டு டிராக் செய்யும் வசதி உள்ளது. அதற்கு https://www.indiapost.gov.in என்ற முகவரியில் சென்று டிராக்கிங் நம்பர் மற்றும் வெரிஃபிகேசன் கோட் நம்பர் பதிவிட்டு “Track Now” என்ற பட்டனை கிளிக் செய்யவும். இப்போது புதிய பக்கம் ஒன்று திறக்கும். அதில் ஏடிஎம் கார்டு இப்போது எங்கு உள்ளது. எப்போது நமது கையில் வந்து சேரும் போன்ற விவரங்களை பார்த்துக்கொள்ள முடியும்.