கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு மாதம் 1800 பென்சின் வழங்கப்படுகின்றது .
கடந்த ஆண்டு தொடங்கிய கொரோனா முதல் அலை கடந்து, இரண்டாம் அலை தற்போது தீவிரமாக உள்ளது. கொரோனா பாதிப்பால் இந்தியாவில் இதுவரை லட்சக்கணக்கான உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கும் திட்டம் ஒன்று உள்ளது. தொழிலாளர் மாநில காப்பீட்டு கழகம் சார்பாக நிவாரண உதவி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த திட்டத்தின் கொரோனா காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவி வழங்கப்படுகின்றது.
ESIC என்ற அமைப்பின் கீழ் காப்பீடு செய்த ஊழியர்கள் கொரோனா காரணமாக இறந்துவிட்டால் அவரை சார்ந்தவர்களுக்கு இந்த திட்டத்தில் இருந்து 1,800 ரூபாய் பென்ஷன் கிடைக்கும். இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் குடும்பத்திற்கு ஊழியர்களின் சம்பளம் கிடைக்கும் என்று ESIC அமைப்பின் காப்பீடு ஆணையர் எஸ் கே ஷர்மா தெரிவித்துள்ளார்.
இந்த அமைப்புக்கு பங்களிக்கும் நபர் கொரோனா காரணமாக உயிரிழந்தால் அவரது குடும்பத்தில் உள்ள மனைவி, குழந்தைகள், பெற்றோர் அல்லது உடன் பிறந்தவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஊழியர்களின் இறுதி சம்பளத்தில் 90% வழங்கப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் ESICக்கு பங்களித்த எந்த ஒரு நிறுவனத்திலும் ஒரு வருடத்திற்கு குறைந்தது 70 நாட்கள் பணியாற்றிய ஊழியர்கள் கொரோனாவால் இறந்து விட்டால் அவரது குடும்பத்திற்கு இந்த நிவாரண தொகை கிடைக்கும். மேலும் உயிரிழந்த நபர் பாதிக்கப்படுவதற்கு முன்பு மூன்று மாதங்களுக்கு குறிப்பிட்ட நிறுவனத்தில் வேலை பார்த்து இருப்பது மிகவும் அவசியம்.