தமிழகத்தில் கொரோனாவை ஒழிப்பதற்கு தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது. மக்களும் ஆர்வமாக முன்பதிவு செய்து தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது. இவ்வாறு தடுப்பூசி போடுபவர்களுக்கு கோவாக்சின் மற்றும் கோவிஷீயீல்டு தடுப்பூசிகள் பரிந்துரைக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் இலவசமாக போடப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்,தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை ஜூலை 28ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என்று தெரிவித்துள்ளார். ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் 28ஆம் தேதியும், தமிழகம் முழுவதும் 29ம் தேதி முதலும் இந்த திட்டம் தொடங்குகிறது. பெரும்பாலான மருத்துவமனைகளில் சிஎஸ்ஆர் உடன் இணைந்து இந்த திட்டத்தை உடனடியாக தொடங்க இருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.