கொரோனா வந்தபிறகு மக்கள் கடுமையான நிதி நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த நெருக்கடி காலத்தில் சீனியர் சிட்டிசன்கள் பயனடையும் விதமாக பல்வேறு வங்கிகளும் சிறப்பு பிக்சட் டெபாசிட் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. இதில் சாதாரண பிக்சட் டெபாசிட் திட்டங்களைக் காட்டிலும் சிறப்பு பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு அதிக வட்டி கொடுக்கப்படுகிறது. இதில் மகிழ்ச்சி செய்தி என்னவென்றால் சிறப்பு பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான கால அவகாசம் ஜூலை 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
எனவே இதில் முதலீடு செய்ய விரும்புவர்களுக்கு இன்னும் சில தினங்கள் மீதம் இருப்பதால் உடனே இணையலாம். தற்போது சிறப்பு பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு எந்த வங்கியில் அதிக வட்டி கொடுக்கப்படுகிறது என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.
எச்டிஎஃப்சி: சீனியர் சிட்டிசன்களுக்கு 6.25% வட்டி.
எஸ்பிஐ: சீனியர் சிட்டிசன்களுக்கு 6.20% வரை வட்டி
ஐசிஐசிஐ: சீனியர் சிட்டிசன்களுக்கு 6.30% வட்டி