Categories
தேசிய செய்திகள்

இன்னும் 4 மாதங்களுக்கு…. இந்த வங்கிகளில் கிரெடிட் கார்டு கிடையாது…. வெளியான ஷாக் தகவல்…!!!

ரிசர்வ் வங்கியானது விதிமுறைகளை சரியாக பின்பற்றாத காரணத்தால் மாஸ்டர் கார்டு நிறுவனங்களுக்கு தடை விதித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு உத்தரவிட்டது. அதன்படி ஜூலை 22ம் தேதி முதல் நான்கு மாதங்களுக்கு மாஸ்டர் கார்டு மூலம் கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு வழங்க கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவையடுத்து மாஸ்டர் கார்டு மூலமாக கிரெடிட் கார்டு வழங்கும் வங்கிகள் தடை காலம் வரை புதிய கார்டுகளை  வாடிக்கையாளர்களுக்கு வழங்க முடியாது என்பதனால் எஸ் வங்கி ரூபே கார்டு மூலமாக கிரெடிட் கார்டுகள் வழங்க ஒப்பந்தம் செய்துள்ளது.

அதேபோல இன்னும் நான்கு மாதங்களுக்கு எஸ் வங்கி வாடிக்கையாளர்கள் மாஸ்டர் கார்டு மூலமாக புதிய கிரெடிட் / டெபிட் கார்டுகள் வாங்க முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஆக்ஸிஸ் வங்கி,  இந்தஸ் இந்த் பேங்க், ஹெச்டிஎஃப்சி வங்கி உள்ளிட்டவைகளும் அறிவித்துள்ளன.

Categories

Tech |