தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. கடந்த கல்வி ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் ஒருசில வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் தமிழகத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சுமார் 3 லட்சம் பேருக்கு ஆன்-லைன் வழிக் கற்பித்தல் பயிற்சியை அளிக்க போவதாக அரசு அறிவித்துள்ளது. ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில் ஆன்-லைன் வழிக் கற்பித்தல், வீடியோக்களை பயன்படுத்துவது, ஆவணங்களை அனுப்புதல் மற்றும் பெறுதல், மாணவரின் செயல்பாட்டை மதிப்பிடுதல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படும். இதனால் 50 லட்சம் அரசு பள்ளி மாணவர்கள் ஆன்லைன் வழி கற்க வழி ஏற்படும்.