Categories
உலக செய்திகள்

திடீரென இடிந்து விழுந்த பாலம்…. 3 பேர் மாயமான சோகம்…. தெற்கு சீனாவில் தீவிரமாக நடைபெறும் மீட்பு பணி….!!

சீனாவில் பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் அதனை கட்டும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 5 தொழிலாளர்களில் 2 பேர் கடலில் விழுந்து உயிரிழந்துள்ள நிலையில் 3 பேரை தேடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

தெற்கு சீனாவில் குவாங்டாங் என்னும் மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாட்டத்திலுள்ள ஜூஹாய் என்னும் நகரத்தில் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பாலம் கட்டும் பணியில் சம்பவத்தன்று சுமார் 5 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.

அப்போது கட்டப்பட்டு வந்த பாலத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்துள்ளது. இதனால் அதனை கட்டும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தொழிலாளர்கள் கடலில் விழுந்துள்ளார்கள்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த மீட்புப் பணியாளர்கள் தொழிலாளர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள். அந்த மீட்பு பணியின் போது 2 தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில் கிடைத்துள்ளார்கள். மேலும் 3 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

 

Categories

Tech |