Categories
அரசியல் மாநில செய்திகள்

“அதிமுக சார்பில் விருப்பமனு”…. 2 தொகுதிக்கு இத்தனை பேரா?

அதிமுக சார்பில் விக்கிரவாண்டி, நாங்குநேரி தேர்தலில் போட்டியிட இதுவரை மொத்தம் 27 பேர் விருப்ப மனு அளித்துள்ளனர்.

தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிக்கான இடைத்தேர்தல் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது . அதன்படி அக்டோபர் 21-ல் இடைத்தேர்ல் நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை  அக்டோபர் 24_ஆம் தேதியும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

Image

இதையடுத்து அதிமுக மற்றும் திமுக இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கு ரூ 25,000 பெற்றுக்கொண்டு விருப்பமனு அளித்து வருகின்றன. இதில் அதிமுக சார்பில் ராயப்பேட்டை  தலைமை அலுவலகத்தில் இன்று  காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விக்கிரவாண்டி, நாங்குநேரி தேர்தலில் போட்டியிட இதுவரை மொத்தம் 27 பேர் விருப்ப மனு அளித்துள்ளனர். அதில் அதிகபட்சமாக நாங்குநேரி தொகுதியில் 18 பேரும், விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட 9 பேரும் விருப்பமனு பெற்றுள்ளனர்.

Image

அதிமுக தலைமையகத்தில் நாளை காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை விருப்பமனு பெறப்படுகிறது. விருப்பமனுக்களை பூர்த்தி செய்து நாளை பிற்பகல் 3 மணிக்குள்  தலைமை அலுவலகத்தில் வழங்க வேண்டும் என்றும், விருப்பமனு அளித்தவர்களிடம் நாளை மாலை 3: 30 மணி முதல் நேர்காணல் நடைபெறுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |