தமிழின் பிரபல நடிகர், இசையமைப்பாளரான ஹிப்ஹாப் தமிழா ஆதி கோயம்புத்தூரைச் சேர்ந்தவர். இவர் பள்ளி நாட்களில் கவிதை எழுதுவதில் ஆர்வமாகவும் ராப் இசையால், ஈர்க்கப்பட்டவராகவும் இருந்தார். ஓய்வு நேரங்களில் வீட்டில் இருந்த கணினியில் இசைக்கோர்வை மென்பொருளை நிறுவி தான் எழுதிய பாடல்களை ராப் இசையில் பாடி எதாவது பதிவுசெய்துவருவதை வழக்கமாக கொண்டார்.
2005இல் யூடியூப் இந்தியாவில் அறிமுகமானபோது அதில் தான் பதிவுசெய்த பாடல்களை ‘ஹிப்ஹாப் தமிழன்’ என்ற பெயரில் பதிவுசெய்தார். இந்நிலையில் ஆதியின் யூடியூப் பக்கம் ஹேக்கர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளது. அவரது யூடியூப் சேனலின் பெயர் “Algorand Social News” என மாற்றப்பட்டு அவரது பக்கத்தில் பதிவிட்டு இருந்து அனைத்து வீடியோக்களும் நீக்கப்பட்டுள்ளன. இது அவருடைய ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.