Categories
உலக செய்திகள்

இது எங்களை அவமதிக்கும் கருத்து..! பிரிட்டன் மக்கள் கடும் கண்டனம்… மன்னிப்பு கேட்ட அமைச்சர்..!!

பிரிட்டன் சுகாதாரத்துறை அமைச்சர் சஜித் ஜாவித் கொரோனாவிலிருந்து தப்பிப்பதற்காக வீடுகளில் முடங்கி இருப்பவர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தெரிவித்ததற்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார்.

பிரிட்டன் சுகாதாரத்துறை அமைச்சர் சஜித் ஜாவித் அண்மையில் கொரோனாவிலிருந்து குணமடைந்த நிலையில் பொதுமக்கள் தங்களை கொரோனாவிலிருந்து பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும், அவ்வாறு தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை என்றால் வீடுகளிலேயே பயந்து பதுங்கி கொள்ளுங்கள் என்று தெரிவித்திருந்தார்.

இந்த கருத்து தங்களைப் கொரோனாவிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக வீடுகளில் முடங்கி இருப்பவர்களை அவமதிப்பதாக பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இதையடுத்து பிரிட்டன் அமைச்சர் சஜித் ஜாவித் தனது கருத்துக்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார்.

Categories

Tech |