ஆஸ்திரேலியா நாட்டில் கொரோனா அதிகரித்து வருவதால் கட்டுப்பாட்டு விதிமுறைகளை அமல்படுத்தியதற்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
உலக அளவில் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக பல்வேறு நாடுகள் பாதிப்படைந்துள்ளது. இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் 6.56 லட்சத்திற்கும் மேலான மக்களுக்கு தொற்றானது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தொற்று பாதிப்பினால் 10,700 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் ஆஸ்திரேலியா அரசு கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது. இதனை எதிர்த்து மெல்போன், பிரிஸ்போன் போன்ற பகுதிகளில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வைரஸ் தொற்றினால் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில் மக்கள் போராட்டத்தில் ஈடுபடுவது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இதே போன்று சிட்னியில் கலவரத்தில் ஈடுபட்ட 57 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை மீறியவர்களில் 500 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இந்தப் போராட்டங்கள் தினசரி கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கையை அதிகரிக்கும் என்ற பயம் எழுந்துள்ளது. இது குறித்து நியூ சவுத் வேல்ஸ் முதல்வர் கிளாடிஸ் பெரிஜிக்ளியான், இந்த செயலிற்காக மக்கள் நாண வேண்டும் என்று கூறியுள்ளார். இதுவரை மெல்போன் மாகாணத்தில் 141 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுநாள் வரை பதிவான தொற்று எண்ணிக்கையை விட நேற்று அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.