பிரான்ஸ் நாட்டு மக்கள் கொரோனா கட்டுப்பாடுக்கு எதிராக நடத்திய போராட்டமானது திடீரென வன்முறையாக மாறியதில் ஏராளமான காவல்துறையினர் பலத்த காயமடைந்துள்ளனர்.
பிரான்ஸ் நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அந்நாட்டு அரசு மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் சுகாதார சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இதற்கு அந்நாட்டு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆங்காங்கே போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதில் சுமார் 161000 பேர் போராட்டத்தில் கலந்து கொண்டதாகவும், 11000 பேர் தலைநகர் பாரிசில் கலந்து கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் அந்தப் போராட்டமானது வன்முறையாக மாறியதில் இரு ஜொந்தாமினர், 27 காவல்துறையினர் உட்பட மொத்தம் 29 அதிகாரிகள் பலத்த காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே 24 பேர் ஆர்ப்பாட்ட முடிவில் தலைநகர் பாரிசில் வைத்து அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பிரான்ஸ் நாடு முழுவதும் 71 பேர் அந்த போராட்டத்தில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.