நைஜீரியா நாட்டில் பள்ளி ஒன்றில் கடத்தப்பட்ட மாணவர்களை மீட்கும் பணியில் அரசு தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறது.
நைஜீரியா நாட்டில் உள்ள கடுனா மாகாணத்தில் பேப்டிஸ்ட் அகாடமி பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களை கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கடத்தல்காரர்கள் கடத்தி சென்றுள்ளனர். இந்த நிலையில் கடத்தல்காரர்கள் ஒரு மாணவருக்கு 5 லட்சம் வீதம் பிணைத்தொகையை கொடுக்க வேண்டும் என்று மிரட்டல் விடுத்துள்ளனர். இதனை அடுத்து உடல் நலம் காரணமாக ஒரு மாணவரை கடத்தல்காரர்கள் விடுவித்துள்ளனர்.
அதன் பின்பு அவர்களிடம் இருந்த 5 பேர் தப்பித்து வந்துள்ளனர். மேலும் மூன்று வாரங்களுக்குப் பின்பு 28 மாணவர்கள் கடத்தல்காரர்களிடம் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இன்னும் கடத்தல்காரர்களால் சிறை வைத்திருக்கும் 80 பேரை எவ்வாறு மீட்கலாம் என்று நைஜீரியா அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.