ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன .
இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் 9-ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்த 14-வது சீசன் ஐபிஎல் போட்டி கொரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இதனால் மீதமுள்ள 31 போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில்நடக்க உள்ள மீதமுள்ள ஐபிஎல் போட்டி அட்டவணையை பிசிசிஐ நேற்று வெளியிட்டுள்ளது. இந்தப் போட்டிகள் செப்டம்பர் மாதம் 19-ம் தேதி தொடங்கி அக்டோபர் 15-ம் தேதி வரை நடைபெறுகிறது.
🗓️ The dates are OUT!
Get ready for the #VIVOIPL extravaganza in the UAE 🇦🇪
FULL SCHEDULE 👇 pic.twitter.com/8yUov0CURb
— IndianPremierLeague (@IPL) July 25, 2021
இதில் தொடக்க ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதிக் கொள்கின்றன. இந்தப் போட்டிகள் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் என்றும் ,ஒரே நாளில் 2 போட்டிகள் நடக்கும்போது மாலை 3.30 மணிக்கு முதல் போட்டி நடைபெறும். இதில் மொத்தமாக 7 நாட்களில் இரண்டு லீக் போட்டிகள் நடைபெறுகின்றன. இதையடுத்து துபாயில் 13 போட்டிகளும் ,சார்ஜாவில் 10 போட்டிகள் மற்றும் அபுதாபியில் 8 போட்டிகளும் நடைபெற உள்ளது.