மதுரைக்கு எதிரான 8-வது லீக் ஆட்டத்தில் திருச்சி அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
5-வது சீசன் டிஎன்பிஎல் டி-20 போட்டியில் 8-வது லீக் ஆட்டம் நடைபெற்றது. இந்த போட்டியில் மதுரை பாந்தர்ஸ் – ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதிக்கொண்டன . இதில் டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த மதுரை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 137 ரன்களை குவித்தது. இதில் அதிகபட்சமாக கவுசிக் 42 ரன்கள் குவித்தார். இதன்பிறகு களமிறங்கிய திருச்சி அணி 138 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடியது.
ஆனால் 10 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து திருச்சி அணி தடுமாறியது. இதன்பிறகு களமிறங்கிய அட்னன் கான் – ஆதித்ய கணேஷ் ஜோடி சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தனர். இதில் அதிரடி ஆட்டத்தை காட்டிய அட்னன் கான் 53 ரன்கள் எடுத்தார். இறுதியாக 19 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்தது .இதனால் 3 விக்கெட் மதுரையை வீழ்த்தி வித்தியாசத்தில் திருச்சி அணி வெற்றி பெற்றது.