Categories
உலக செய்திகள்

அடுத்தடுத்து தாக்கும் பேரிடர்கள்… பிரபல நாட்டில் விமான சேவை ரத்து… வெளியான பரபரப்பு தகவல்..!!

சீனாவில் ஏற்பட்ட கனமழை, புயல், வெள்ளம் உள்ளிட்ட பேரிடர்களால் ரயில் மற்றும் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவில் உள்ள ஷெங்ஜோ என்ற நகரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இதுவரை இல்லாத அளவிற்கு கனமழை பெய்துள்ளது. இதன் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் அந்த நகரமே நீரில் மூழ்கியதோடு, 50-க்கும் மேற்பட்டோர் இந்த பேரிடரில் உயிரிழந்ததாக பரபரப்பு தகவல் வெளியானது.

இந்த பாதிப்பானது சீனாவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருந்த நிலையில் அந்நாட்டின் ஷெஜியாங் மாகாணத்தில் நேற்று இன்-பா என்ற சக்தி வாய்ந்த புயல் ஒன்று மிக மோசமாக தாக்கியுள்ளது. மேலும் 155 கிலோ மீட்டர் வேகத்தில் சுழற்றியடித்த சூறாவளி காற்றால் நூற்றுக்கும் மேற்பட்ட மரங்கள் அடியோடு சாய்ந்துள்ளது.

மின் கம்பங்களும் சாலைகளில் சரிந்து கிடந்துள்ளன. கடைகள் மற்றும் வீடுகளில் உள்ள மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டதோடு அங்கு தொடர்ந்து கனமழையும் பெய்துள்ளது. ஆனால் இந்த பேரிடரில் யாருக்கேனும் காயம் அல்லது உயிரிழப்பு ஏதேனும் ஏற்பட்டதா என்பது குறித்து தகவல் எதுவும் தெரியவில்லை. இதற்கிடையே சுமார் நூற்றுக்கணக்கான விமானங்கள் ஷாங்காய் நகரில் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Categories

Tech |