Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தினமும் குடிச்சிட்டு வராங்க… அடிக்க வந்த கணவரை தடுத்த மனைவி… சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு…!!

நாமக்கல் மாவட்டத்தில் மதுஅருந்திவிட்டு தகராறில் ஈடுபட்ட கணவரை மனைவி கீழே தள்ளிவிட்டதில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அடுத்துள்ள அருந்ததியர் காலனியில் பழனிச்சாமி(65) அவரது மனைவி வள்ளியம்மாள்(55) ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு புனிதா(17) என்ற மகளும் உள்ளார். இந்நிலையில் கூலித்தொழில் செய்து வரும் பழனிசாமிக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் அடிக்கடி மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகின்றது.

இதனையடுத்து கடந்த 22ஆம் தேதி பழனிச்சாமி வேலையை முடித்துவிட்டு வழக்கம்போல மது அருந்திவிட்டு வள்ளியம்மாளுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது மதுபோதையில் வள்ளியம்மாளை தாக்கியுள்ளார். இதனைத்தொடர்ந்து சண்டை முற்றிப்போன நிலையில் அடிக்க வந்த கணவரை வள்ளியம்மாள் தடுத்து அவரை கீழே தள்ளியுள்ளார். இதில் கீழே விழுந்த பழனிச்சாமியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த வள்ளியம்மாள் உடனடியாக அக்கம்பக்கத்தினரை அழைத்து பழனிசாமியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. ஆனால் நேற்று காலை சிகிச்சை பலனின்றி பழனிசாமி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வள்ளியம்மாளை கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |