தமிழகத்தில் தென்மேற்கு பருவமழையின் காரணமாக, தமிழகத்தின் பல மாவட்டங்களிலும், குறிப்பாக சென்னை, கோவையில் அதிகளவில் மழை பெய்து வருகிறது. இதனால் ஏரிகள், குளங்கள் அணைகள் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 136 அடியை தாண்டியுள்ளது. இதன் காரணமாக கேரளாவில் இடுக்கி மாவட்ட ஆட்சியருக்கு தமிழக பொதுப்பணித்துறை முதல் எச்சரிக்கை தகவல் அனுப்பியது.
அணை நீர்மட்டம் 136.05 அடி, நீர்வரத்து 3,631 கன அடி, நீர் திறப்பு 1,867 கன அடியாக உள்ளது. 152 அடி கொள்ளளவு கொண்ட முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி வரையில் தண்ணீர் தேக்கப்படும்.