தமிழின் முக்கிய இலக்கண நூல்களை மீட்டெடுத்த தமிழ் பேராசிரியர் இரா.இளங்குமரன் காலமானார். இவருக்கு வயது 94. உலகில் முதல் முதலாக பெண் ஒருவரால் எழுதப்பட்ட இலக்கண நூலான காக்கைப்பாடினியத்தை, அது மறைந்து விட்டது என்று தமிழ் அறிவுலகம் கருதிய வேளையில், அதனை மீட்டெடுத்து தந்தார். மேலும் யாப்பருங்கலம், புறத்திரட்டு உள்ளிட்ட நூல்களையும் பதிப்பிட்டுள்ளார். இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் முதுபெரும் தமிழறிஞர் இளங்குமரனார் மறைவுக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார் .அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இரா. இளங்குமரனார் மறைவு தமிழ் நாட்டுக்கும், தமிழ் மொழிக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என்று குறிப்பிட்டுள்ளார்.