Categories
கிரிக்கெட் விளையாட்டு

TNPL 2021 : மணிபாரதி, ஹரி நிஷாந்த் அதிரடி …. திண்டுக்கல் டிராகன்ஸ் அபார வெற்றி ….!!!

கோவைக்கு  எதிரான போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் திண்டுக்கல் அணி அபார வெற்றி பெற்றது.

5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டியில் நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் – திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதிக் கொண்டன . இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த கோவை அணி 20 ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்தது. இதில் தொடக்க வீரராக களமிறங்கிய சுரேஷ்குமார் 58 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து கங்கா ஸ்ரீதர் ராஜு90 ரன்களும் ,சாய் சுதன் 40 ரன்களும் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இதன் பிறகு களமிறங்கிய திண்டுக்கல் அணி 202 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடியது. இதில் அருண் 20 ரன்களில் ஆட்டமிழந்தார் .இதையடுத்து கேப்டன் ஹரி நிஷாந்துடன், மணிபாரதி ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் மணிபாரதி 81 ரன்களும் , ஹரி நிஷாந்த் 70 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியாக 18 ஓவர்களில் திண்டுக்கல் அணி 5 விக்கெட் இழப்பிறகு  202 ரன்களை குவித்து அபார வெற்றி பெற்றது. இதில் ஆட்டநாயகன் விருது மணிபாரதிக்கு வழங்கப்பட்டது.

Categories

Tech |