தீ குளித்து பெண் தற்கோலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்திலுள்ள சாக்கோட்டை பகுதியில் அழகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் சிற்பங்களை செதுக்கும் வேலை செய்து வருகிறார். இவருக்கு கலைச்செல்வி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் இருக்கின்றன. கடந்த சில நாட்களாக கலைச்செல்விக்கு உடல் நலம் சரியில்லாத காரணத்தால் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் திடீரென கலைச்செல்வி தன் உடல் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
இதனால் கலைச்செல்வி ஆடையில் தீ மளமளவென பற்றி எரிந்ததில் சத்தம் போட்டுள்ளார். அதன்பிறகு கலைச்செல்வியின் அலறல் சத்தம் கேட்டு அருகிலுள்ளவர்கள் தீயை அணைத்து அவரை மீட்டனர். இதனையடுத்து தீக்காயமடைந்த கலைச்செல்வியை அருகிலுள்ளவர்கள் மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி கலைச்செல்வி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த சாக்கோட்டை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.