தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயிலில் அடிபட்டு முதியவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடி பகுதியில் தண்டவாளத்தில் ரயிலில் அடிப்பட்டு தலை துண்டிக்கப்பட்டு கை, கால்கள் உடைந்த நிலையில் முதியவரின் சடலம் ஒன்று கிடந்தது. இது பற்றி தகவலறிந்த ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முதியவரின் சடலத்தை கைப்பற்றி காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில் ரயிலில் அடிபட்டு இறந்த முதியவர் சிறுவயல் பகுதியில் வசிக்கும் ராஜாமணி என்பதும், அவர் அதிகாலையில் தண்டவாளத்தைக் கடக்க முயன்று போது ரயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்ததும் தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.