கொரோனா வைரஸ் குறித்து இங்கிலாந்து சுகாதாரத்துறை அமைச்சர் சர்ச்சையாக பதிவிட்டதற்கு மன்னிப்பு கோரியுள்ளார்.
உலக அளவில் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸினால் இங்கிலாந்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இங்கிலாந்து நாட்டில் தினசரி வைரஸ் தொற்றால் 30000திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே சமயம் இங்கிலாந்து நாட்டில் கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இங்கிலாந்து சுகாதாரத்துறை அமைச்சர் சாஜித் ஜாவித் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வீட்டில் தனிமைபடுத்தி இருந்துள்ளார். இது குறித்து ஒன்றை சாஜித் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதில் “நான் தொற்றிலிருந்து பூரணமாக குணமடைந்து விட்டேன். மக்கள் யாவரும் இந்த வைரஸை கண்டு பயந்து ஓடக் கூடாது. அதற்கு பதிலாக அதனுடன் வாழ பழகிக் கொள்ளவேண்டும்” என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவில் உள்ள “மக்கள் பயந்து ஓடக் கூடாது” என்ற பதிவிற்காக பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். இந்த எதிர்ப்பை தொடர்ந்து சாஜித் தனது ட்விட்டர் கணக்கில் மன்னிப்பு கேட்பதும் இன்றி தனது பதிவையும் நீக்கிவிட்டார்.