Categories
தேசிய செய்திகள்

பெண்களே உடனே உங்க போன் எடுங்க…. இது உங்களுக்கான மிக முக்கிய பதிவு….!!!!

நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. அதற்கு எதிராக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும் சிலர் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். அதனால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகிவருகிறது. இந்நிலையில் பெண்கள் அனைவரும் தங்கள் போனின் அவசர உதவிக்கான எண்களை வைத்துக் கொள்வது மிகவும் நல்லது.

அதற்கான எண்கள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி அவசர உதவிக்கு – 1091, பெண்கள் மீதான வன்கொடுமை புகாருக்கு 181, தேசிய பெண்களுக்கான ஆணையம் – 011 26944754, 26942369 , குழந்தைகளுக்கான பாதுகாப்புக்கு 1098, பெண்கள் மற்றும் குழந்தைகள் காணாமல் போனால் – 1094, மன உளைச்சலால் பாதிப்புக்குள்ளாகும் பெண்களுக்கு – 9911599100, தமிழ்நாடு பெண்கள் ஆணையம் – 044 28592750 , ராகிங் தொல்லைக்கு – 155222 ஆகிய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |