Categories
உலக செய்திகள்

ஒரே ஒரு டிக்… “மாற்றி போட்டதால் தீவிரவாதியான 90 வயது தாத்தா”… என்ன நடந்தது…? வாங்க பார்க்கலாம்…!!!

அமெரிக்கா செல்வதற்கு விசா விண்ணப்பித்தபோது 90 வயது தாத்தா தான் ஒரு தீவிரவாதி என்று அதில் குறிப்பிட்டுள்ளார். இதனால் அவர் வாழ்நாள் முழுவதும் அமெரிக்கா செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டுக்கு செல்வதற்கு இதற்கு முன் விண்ணப்பித்து உள்ளீர்களா? நீங்கள் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு செய்வதற்கு பல்வேறு விதமான விசாக்கள் வழங்கப்படும். அந்த விசா இருந்தால் மட்டுமே அந்த நாட்டுக்குள் நம்மால் செல்ல முடியும். இப்படியாக அமெரிக்கா செல்வதற்கு கம்ப்யூட்டர் மூலம் விசாவிற்கு ஸ்காட்லாந்தை சேர்ந்த 90 வயது முதியவர் ஜான் ஸ்டீவன்சன் அப்ளை செய்துள்ளார். தனக்கும் தனது மனைவிக்கும் இவர் விசா கேட்டு ஆன்லைன் மூலம் அப்ளை செய்தார். முன்னதாக அவர் இரண்டு லட்சம் ரூபாய் செலவில் அமெரிக்காவில் தங்குவதற்கு இடம், சுற்றிப் பார்ப்பதற்கு என புக்கிங் செய்துள்ளார்.

இந்நிலையில் அவரது விசா நிராகரிக்கப்பட்டது. ஏன் நிராகரிக்கப்பட்டது என்ற காரணத்தை அவர் தெரிந்து கொள்ள முயன்றபோது, விசாவுக்கான விண்ணப்பத்தில் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. நீங்கள் இதற்கு முன்னர் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளீர்களா? என்று கேட்டதற்கு அவர் ஆம் என்று பதில் அளித்துள்ளார். இதனால் இவரது விசா நிராகரிக்கப்பட்டது. மேலும் அமெரிக்காவிற்கு வாழ்நாள் முழுவதும் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இவரை குற்றவாளியாக அமெரிக்கா கருதுகின்றது.

இதையடுத்து அவர் லண்டனில் உள்ள அமெரிக்க தூதரகத்தை தொடர்பு கொண்டு தனது நிலைமையை எடுத்துரைத்த போது அவர்கள் தங்களால் எதுவும் செய்ய முடியாது என்று கூறிவிட்டனர். இதனால் அவருக்கு அமெரிக்கா செல்வதற்கு போக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு டிக்கை மாற்றிப் போட்ட காரணத்தினால் 90 வயது தாத்தா எந்த குற்றமும் செய்யாமல் தீவிரவாதியாக கருதப்படுகிறார். இந்த சம்பவம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |