அதிமுக தலைமை அலுவலகத்தில் விருப்பமனு பெற்றவர்களிடம் இன்று நேர்காணல் நடைபெறுகிறது.
தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிகள் மற்றும் புதுவையில் காமராஜர் தொகுதியிலும் வருகின்ற அக்டோபர் 21-ல் இடைத்தேர்ல் நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 24_ஆம் தேதியும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதையடுத்து அதிமுக நேற்று காலை 10 மணி முதல் விக்கிரவாண்டி, நாங்குநேரி தேர்தலில் போட்டியிட விரும்புவர்களுக்கு விருப்பமனு அளித்து வருகின்றது. இதுவரை மொத்தம் 27 பேர் விருப்ப மனு அளித்துள்ளனர். அதில் அதிகபட்சமாக நாங்குநேரி தொகுதியில் திரைப்பட இயக்குனர் நாஞ்சில் பி.சி அன்பழகன், கே ஆர் பிரபாகரன், விஜயகுமார், முன்னாள் எம்.பி மனோஜ் பாண்டியன் உட்பட 18 பேரும், விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட முன்னாள் எம்.பி ஆர்.லட்சுமணன் உட்பட 9 பேரும் விருப்பமனு பெற்றுள்ளனர்.
விருப்பமனுக்களை பூர்த்தி செய்து நாளை பிற்பகல் 3 மணிக்குள் தலைமை அலுவலகத்தில் வழங்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று மாலை 3: 30 மணிக்கு ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி முன்னிலையில் நேர்காணல் நடைபெறுகிறது. இதனிடையே நாளை சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக எம் ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது.