இந்தியா முழுவதிலும் கொரோனா இரண்டாம் அலை அதி வேகமாக பரவி வருகிறது. இந்தியா மட்டுமல்லாமல் மற்ற நாடுகளிலும் கொரோனா இரண்டாம் அலை வீசத் தொடங்கியுள்ளது. அதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கையும் ஏராளம். இருந்தாலும் நாள்தோறும் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
அதன்படி கொரோனாவால் உயிர் இழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் அனைவரும் பிஎம் கேர்ஸ் நிதியத்தில் இருந்து 10 லட்சம் வரை நிதி உதவி பெற தகுதி உடையவர்கள் ஆவர். இந்த குழந்தைகளை அடையாளம் காணுமாறு அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் தலைமைச் செயலாளர்கள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் செயலர் இண்டிவர் பாண்டே கடிதம் எழுதியுள்ளார்.