Categories
சினிமா தமிழ் சினிமா

நயன்தாராவின் புதிய திரில்லர் படம்… விறுவிறுப்பாக நடக்கும் படப்பிடிப்பு…!!!

நயன்தாரா புதிதாக திரில்லர் படம் ஒன்றில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நயன்தாரா. தற்போது இவர் நெற்றிக்கண், காத்துவாக்குல ரெண்டு காதல், அண்ணாத்த ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் நெற்றிக்கண், அண்ணாத்த ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. மேலும் விக்னேஷ் சிவன் இயக்கி வரும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

star wars video game: MSK Movies Anjali reveals the whole truth | Imaikkaa  Nodigal Tamil Movie | Nayanthara, Anurag Kashyap

இந்நிலையில் நடிகை நயன்தாரா புதிதாக திரில்லர் படம் ஒன்றில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜி.எஸ்.விக்னேஷ் இந்த படத்தை இயக்கி வருகிறார். இவர் இயக்குனர் வெங்கட் பிரபுவின் உதவியாளர் ஆவார். மேலும் இந்த படத்திற்கு யோஹன் இசையமைக்கிறார். குறுகிய கால தயாரிப்பாக இந்த படம் உருவாகி வருகிறது. ஏற்கனவே நயன்தாரா நடிப்பில் வெளியான மாயா, டோரா, ஐரா போன்ற திரில்லர் படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |