Categories
மாநில செய்திகள்

வெளிநாட்டில் பணியாற்ற விரும்புபவர்களுக்கு…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…..!!!!

வெளிநாட்டிற்குச் சென்று பணி செய்ய விரும்புவர்களுக்கு உதவும்விதமாக தமிழ்நாடு அரசு, ஒரு நிறுவனத்தை உருவாக்கி செயல்படுத்தி வருகிறது. வெளிநாட்டு மனித ஆற்றல் கார்ப்பரேஷன் லிமிடெட்(ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேஷன் லிமிடெட்) என்ற நிறுவனம் வெளிநாடுகளில் சென்று பணியாற்ற விரும்புபவர்களுக்கு பலவேறு சேவைகளை வழங்கி வருகிறது. குறிப்பாக தரமான, தகுதியான, திறன் மிக்க நபர்களைத் தேர்வு செய்து வெளிநாடுகளில் பல்வேறு நிறுவனங்களில் தத்தெடுப்பு பணியமர்த்துவதைக் குறிக்கோளாகக் கொண்டு இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இந்த நிறுவனம் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம். அதன்படி தற்போது United Kingdom-த்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரூ.2 லட்சம் முதல் ரூ.2 1/2 லட்சம் வரை மாதசம்பளம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆண் மற்றும் பெண் விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி ஆகஸ்ட் 31-ம் தேதியாகும்.

மேலும் இந்த வேலைக்கான கூடுதல் தகவல் மற்றும் எப்படி விண்ணப்பிப்பது என்பது உள்ளிட தகவல்களை கீழ்காணும் லிங்க்கில் சென்று பார்க்கலாம்.

Categories

Tech |