அய்யப்பனும் கோஷியும் தெலுங்கு ரீமேக் படத்தின் படப்பிடிப்பை இன்று மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
மலையாள திரையுலகில் கடந்த 2020-ஆம் ஆண்டு சச்சி இயக்கத்தில் பிருத்விராஜ், பிஜு மேனன் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் அய்யப்பனும் கோஷியும். முன்னாள் ராணுவ வீரருக்கும், காவலருக்கும் இடையேயான ஈகோவை மையமாக வைத்து இந்த படத்தின் கதை அமைக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. திரிவிக்ரம் இயக்கும் இந்த படத்தில் பவன் கல்யாண், ராணா இருவரும் நடிக்கின்றனர். சித்தாரா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார் .
#BheemlaNayak is back on duty 🔥🤩@SitharaEnts #ProductionNo12 shoot resumes today with all the safety precautions!
Power Star @PawanKalyan @RanaDaggubati #Trivikram @MusicThaman @saagar_chandrak @vamsi84 @NavinNooli pic.twitter.com/JA6EPqqJFT
— Sithara Entertainments (@SitharaEnts) July 26, 2021
இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அய்யப்பனும் கோஷியும் தெலுங்கு ரீமேக் படத்தின் படப்பிடிப்பு பவன் கல்யாண் நடிக்கும் காட்சிகளுடன் இன்று மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும் போலீஸ் கெட்டப்பில் பவன் கல்யாண் போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது. தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.