தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் சூழலில், மக்களுக்கு சற்று குளிர்ச்சியூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஜூன் மூன்றாம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. அதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் தென்மேற்கு பருவகாற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலோர மாவட்டங்களில் லேசான மழையும் கோவை, திண்டுக்கல், ஏரி மற்றும் தென்காசி போன்ற மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்ய கூடும் என்றும் தெரிவித்துள்ளது.