Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க” நூதன முறையில் பெண்ணிடம் மோசடி…. வலைவீசி தேடும் காவல்துறையினர்….!!

நூதன முறையில் பெண்ணிடம் பணமோசடி செய்த மர்ம நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கட்டுமாவடி பகுதியில் ராஜேஷ் கண்ணன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு கார்த்திகா என்ற மனைவி இருக்கின்றார். இந்நிலையில் கார்த்திகாவை தொலைபேசியில் தொடர்பு கொண்ட மர்மநபர் தன்னை வங்கியின்  மேலாளராக  அறிமுகப்படுத்தியுள்ளார். இதனையடுத்து கார்த்திகாவிடம் மர்மநபர் தங்களின் ஏ.டி.எம் கார்டை புதுப்பிக்க வேண்டும் என கூறி ஏ.டி.எம் கார்டு எண் மற்றும் ரகசிய குறியீட்டு எண்ணை கேட்டுள்ளார். இதனை நம்பி கார்த்திகா ஏ.டி.எம் கார்டு எண் மற்றும் ரகசிய எண்ணை மர்ம நபரிடம் தெரிவித்துள்ளார்.

அதன்பின் கார்த்திகாவின் வங்கி கணக்கில் இருந்து மர்மநபர் 13 ஆயிரம் ரூபாய் எடுத்துள்ளார். இதனையடுத்து கார்த்திகா தனது வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டிருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து கார்த்திகா புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பணமோசடி செய்த மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |