போலி ஆவணங்களை காப்பீடு நிறுவனத்தில் ஒப்படைத்த வாலிபர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அடப்பன் பகுதியில் ஜாகிர் உசேன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் தண்ணீர் டேங்கர் லாரி உரிமையாளர் ஆவார். இந்நிலையில் ஜாகிர் உசேனின் லாரி விபத்துக்குள்ளானதில் போலியான காப்பீட்டு ஆவணங்களை தயார் செய்து நிதி நிறுவனத்தில் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து காப்பீட்டு நிறுவனம் சார்பில் ஜாகீர்உசேன் மீது திருக்கோகர்ணம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் ஜாகீர்உசேன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.