சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் விஜயராகவன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் அதே பகுதியில் பெட்டி கடை வைத்துள்ளார். இந்நிலையில் விஜயராகவன் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து விஜயராகவன் கடையில் விற்பனைக்காக வைத்திருந்த 100 கிலோ புகையிலைப் பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்த குற்றத்திற்காக விஜயராகவனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.