ராமநாதபுரம் மாவட்டத்தில் சூப்பிரண்டு அதிகாரியின் உத்தரவின்படி மதுவிலக்கு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 69 பேரை கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி கார்த்திக் அளித்த உத்தரவின்படி மதுவிலக்கு காவல்துறையினர் மாவட்டம் முழுவதிலும் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி சட்ட பதுக்கி வைத்து விற்பனை செய்த 32 பேரை கைது செய்துள்ளனர்.
இதனையடுத்து அவர்களிடம் இருந்த 338 மதுபாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அந்த சோதனையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 37 பேரையும் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்த புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.