Categories
விளையாட்டு

நாடு திரும்பிய மீராபாய் சானுக்கு …. விமான நிலையத்தில் உற்சாக  வரவேற்பு

டோக்கியோ ஒலிம்பிக் பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு  வெள்ளிப் பதக்கம்  வென்று சாதனை படைத்தார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32-வது ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு  வெள்ளிப் பதக்கத்தை வென்று சாதனை படைத்தார். அவருக்கு அரசியல் தலைவர்கள் ,பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஜப்பானில் இருந்து இன்று டெல்லி திரும்பிய மீராபாய் சானுக்கு விமான நிலையத்தில் உற்சாக  வரவேற்பு அளிக்கப்பட்டது. இதன் பிறகு கொரோனா நெறிமுறையின் படி அவருக்கு விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

Categories

Tech |