Categories
பல்சுவை

ஸ்மார்ட் போன்களுக்கு சிறப்பு சலுகை…. இன்று ஒரு நாள் மட்டுமே…. உடனே முந்துங்கள்….!!!!

நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளதால், ஆன்லைன் மூலம் மக்கள் அனைவரும் பொருட்களை வாங்கிக் கொள்கின்றனர். அவர்களுக்கு ஏற்றவாறு ஆன்லைன் நிறுவனங்கள் சலுகைகளை அறிவித்து வருகிறது. இந்நிலையில் அமேசான் நிறுவனம் ஜூலை 26 மற்றும் ஜூலை 27 ஆகிய தேதிகளில் பிரைம் டே சிறப்பு விற்பனை அறிவித்துள்ளது.

அதன்படி ஸ்மார்ட்போன்களுக்கு 40% வரை சிறப்பு தள்ளுபடி, பிற எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் 60 சதவீதம் வரை தள்ளுபடி, தொலைக்காட்சிகளுக்கு 65 சதவீதம் தள்ளுபடி, சமையலறை வீட்டு உபயோகப் பொருட்களுக்கு 70 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. .அந்த வகையில் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு அறிவிக்கப்பட்டு இருக்கும் சலுகை விவரங்கள்.

சாம்சங் கேலக்ஸி எம்31எஸ் – அமேசானில் கேலக்ஸி எம்31எஸ் வாங்குவோருக்கு ஒன்பது மாதங்கள் வரை வட்டியில்லா மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது. இந்தியாவில் இதன் 6 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 15,499 ஆகும்.

எம்ஐ 11எக்ஸ் 5ஜி – சியோமி எம்ஐ 11எக்ஸ் 5ஜி 6 ஜிபி + 128 ஜிபி மாடல் 18 மாதங்களுக்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது. மேலும் சிறப்பு சலுகையில் எம்ஐ 11எக்ஸ் 5ஜி விலை ரூ. 27,999 என மாற்றப்பட்டு இருக்கிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 33,999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஒன்பிளஸ் 9 – அமேசான் பிரைம் டே விற்பனையில் ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்போன் ரூ. 49,999 விலையிலும், ஸ்மார்ட்போனை எக்சேன்ஜ் செய்யும் போது கூடுதலாக ரூ. 4 ஆயிரம் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.

கேலக்ஸி எம்42 5ஜி – சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்42 5ஜி மாடல் விலை ரூ. 21,999 என மாற்றப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனிற்கு ஒன்பது மாதங்களுக்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

ஒன்பிளஸ் 9 ஆர் 5ஜி – அமேசான் பிரைம் டே சேல் விற்பனையில் ஒன்பிளஸ் 9 ஆர் 5ஜி மாடல் ரூ. 39,999 சிறப்பு விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் புது ஸ்மார்ட்போனை எக்சேன்ஜ் செய்யும் போது ரூ. 5 ஆயிரம் கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இன்றுடன் இதற்கான சலுகை முடிவடைகிறது.

Categories

Tech |